மாவட்ட செய்திகள்

மாநாட்டு தீர்மானங்கள்

திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்

1. சிறுபாண்மையினருக்கு தேசிய அளவில் இடஒதுக்கீடு :

      அரசுப்பணிகளில்    சி று பா ன் மை யி ன ர்   கு றி ப் பா க   மு ஸ் லி ம் க ள்  மி க வு ம்  புறக்கணிக்கப்பட்டுள்ளதை   நீதிபதி   ராஜிந்தர்   சச்சார்  தலைமையில்  அமைக்கப்பட்ட  உயர்நிலை  ஆய்வுக்குழு  மத்திய  அரசிடம்  அறிக்கையாக   சமர்பித்துள்ளது.

      சிறுபாண்மை    மக்களின்   கல்வி,   சமூக,   பொருளாதார   நிலைகள்   குறித்து  ஆய்வு செய்வதற்காக   நியமிக்கப்பட்ட   நீதிபதி    ரங்கநாத்  மிஸ்ரா   ஆணையம்   தெளிவான ஆய்வுகளுக்குப்பிறகு அரசுப்பணிகளில் சிறுபாண்மை மக்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீட்டையும் அதில்   முஸ்லிம்களுக்கு  10  சதவிகித  இட   ஒதுக்கீட்டையும்  பரிந்துரைத்துள்ளது.     ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த ஆட்சியில் அமைந்த ஆணைய பரிந்துரைகள் இப்போதும் ஆ ட் சி   தொடரும்  நிலையில்  கண்டிப்பாக   நிறைவேற்றப்பட  வேண்டும்   என   இம்மாநாடு வலியுறுத்துகிறது.  ச மூ க  நீதியின்   ச Vர ம்   அடங்கிய   ஆணைய  பரிந்துரைகளை  கா ல ம் தாழ்த்துவதும்,   ஏற்க   மறுப்பதும்   மிகப்பெரிய   சமூக  அநீதியாகவும், ஒடுக்கு முறையாகவும் அமையும்   என   இம்மாநாடு   சுட்டிக்காட்டுகிறது.

2. விவசாயிகளின் பாதுகாப்பு:

      மரபணு    மாற்றம்   செய்யப்பட்ட   யவீ  கத்திரிக்காய்   ம க் க ளை    நோயாளிகளாக்கி  மண்ணையும்    மலடாக்கக்கூடியவையாகும்.    வெளிநாட்டு   விதை    நிறுவனங்களின்   சதி வலைகளில்   விழுந்து   சொந்த  நாட்டு மக்களின் உடல் நலத்திற்கு உலை வைக்கத்துணிந்த  மத்திய அமைச்சர் சரத்பவாரை இம்மாநாடு வண்மையாக கண்டிக்கிறது.யவீகத்திரிக்காய்களைஇந்திய மண்ணில் அனுமதிக்கக்கூடாது  எனக் குரல் கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம்  ரமேஷின்  கருத்தை   இம்மாநாடு    வரவேற்கிறது.

    மான்சாண்டோ    நிறுவனத்தின்    மரபணு   மாற்றம்    செய்யப்பட்ட   பருத்தி  விதைகள்  ஆந்திர   விவசாயிகளை  தற்கொலைக்கு   தள்ளின.

    வெளிநாட்டு    விதைகள்   தாய்நாட்டின்  மண்ணை த ரிசாக்கும்    ஆயுத   கணைகள்  என்று  எச்சரிப்பதோடு   மரபணு மாற்ற  விதைகளுக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு   வழியுறுத்துகிறது.

3. விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலை:

          விவசாய   நாடாகிய    நம்  நாட்டில்   விவசாயிகளின்   நிலை   வேதனைக்குறியதாகவே தொடர்ந்து வருகிறது. இறக்குமதி கோதுமைக்கு அதிக விலை கொடுக்க எந்த ஆட்சேபனையும் இல்லை   என    அன்மையில்   கூறிய   மத்திய   உணவு   அமைச்சர்   சரத்பவார்  உள்நாட்டில் உற்பத்தியாகும்   உணவு   தாணியங்களுக்கு   உரிய கொள்முதல்   விலை  கொடுக்க  மறுத்து வருவது கொடுமையானதாகும்.   நெல்   சாகுபடியாளர்களுக்கும்,   கரும்பு  விவசாயிகளுக்கும்விவசாயிகள்   நிர்ணயிக்கின்ற   நியாயமான   கொள்முதல்   விலையை  அரசாங்கம் கொடுக்கவேண்டும்  என  இம்மாநாடு  வலியுறுத்துகிறது.

4. ஜோதிபாசுவுக்கு இரங்கல்:

          மேற்கு வங்காளத்தில் 23 ஆண்டுகாலம் முதலமைச்சராக தொடர்ந்து சாதனை படைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசுவின் மறைவிற்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.  எளிமையும்   நேர்மையும்   கடும்   உழைப்பும்   கொண்ட அவரதுமறைவு இந்திய அரசியலுக்கு பெரும் இழப்பாகும்.

          இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு வந்த போதும் தன் கட்சிக்கு      கட்டுப்பட்டு  பிரதமர்  பொறுப்பை  ஏற்க    மறுத்த     அ வ ர து   நேர்மை       மிகுந்த   நிலைபாட்டை    இம்மாநாடு    பெருமையுடன்  நினைவுகூர்கிறது.

5.குடும்ப அட்டை:

         புதிய   குடும்ப   அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டுகளுக்கு  மேலாகியும் சரியான முறையில்   புதிய    குடும்ப   அட்டை    வினியோகிக்காததால்   சம்மந்தப்பட்டவர்கள்   அரசின்    நலத்திட்டங்களை      பயன்படுத்த     முடியவில்லை.  உடனடியாக    சம்பந்தப்பட்டத்  துறையினர் புதியகுடும்ப அட்டைகளை விரைந்து வினியோகிக்க இம்மாநாடு வற்புறுத்துகிறது.

6. சாதி, மதவெறியை தூண்டுபவர்களுக்குக் கண்டனம்:

          நமது   நாடு  வேற்றுமையில்   ஒற்றுமை   என்ற பண்பாட்டை அடித்தளமாக கொண்டது. எனவே   சாதிவெறி   மதவெறியை   தூண்டிவிடுபவர்களையும்   அப்படி   பொது   இடங்களில்  பேசுபவர்களையும் குண்டர்  சட்டத்தில் கைது செய்ய  வேண்டுமென  இம்மாநாடு கோருகிறது.

7.திருவாரூருக்கு விமான நிலையம் தேவை:

          தமிழகத்திலிருந்து   வெளிநாடுகளுக்கு   தொழில் நிமித்தமாகவும், வேலை  நிமித்தமாக செல்பவர்களில்   திருவாரூர் மற்றும் அதனை   சுற்றியுள்ள நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர்  ஆகிய மாவட்டங்களை  சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்பதால் இம்மாவட்ட மக்களின் நலன்   கருதி     திருவாரூரில்   விமான   நிலையம்  அமைக்க   வேண்டும்    என   இம்மாநாடு கோருகிறது.    விரைவில்    மத்திய  பல்கலை   கழகமும்,  மருத்துவக்கல்லூரியும் திருவாரூரில் அமைய உள்ளதால் நாடு முழுவதிலுமிருந்து பேராசிரியர்களும்,  மாணவர்களும் வருகை தர இது   உ த வு ம்  என்பதால்  மத்திய  அ ர சு  இக்கோரிக்கையை   பரிசீலிக்க  வேண்டு மென்று  இம்மாநாடு கோருகிறது.  இது  காரைக்கால்   மற்றும்  நாகப்பட்டினத்தில்   செயல்படும்   துறைமுகங்களின்  முன்னேற்றத்திற்கும்,   வளர்ச்சிக்கும்  உதவியாக  இருக்கும்  என்பதால்  தமிழக அரசு  இவ்விசயத்தில்  மத்திய  அரசை நிர்பந்திக்க  வேண்டுமென  இம்மாநாடு   கோருகிறது.

8.பாஸ்போர்ட் அலுவலகம்:

          திருச்சி  கிளை   பாஸ்போர்ட்   அலுவலகத்தில்   எப்போதும்   கூட்டம்   நிரம்பி   வழிவதால் திருவாரூர்   மற்றும்  அதனை சுற்றியுள்ள  நாகை,  தஞ்சை  மாவட்டங்களை  சேர்ந்த  மக்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும் அது தொடர்பான  இதர  வேலைகளை  செய்து  முடிப்பதற்கும் மிகவும்   சிரமப்படுகிறார்கள்.    எனவே   தஞ்சாவூரில்    புதிய   பாஸ்போர்ட்  கிளை  அலுவலகம்விரைந்து  அமைக்க  மத்திய  அரசு  உதவ  வேண்டுமென  இம்மாநாடு  கோருகிறது.

9.இரயில் போக்குவரத்து:

          நாகூரிலிருந்து  திருவாரூர்  வழியாக  சென்று கொண்டிருந்த  சென்னை,  எர்ணாகுளம், பெங்களூர் செல்லும் இரயில்கள் அகல இரயில் பாதைக்காக நிருத்தப்பட்டன. இப்போது அகலஇரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மேற்கண்ட நகரங்களுக்கு மீண்டும் இரயில்   போக்குவரத்தை   துவங்க   வேண்டும்   என   இரயில்வே  அமைச்சகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

          மேலும் நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு, தரங்கம்பாடி, பூம்புகார், கோடியக்கரை, முத்துப்பேட்டை போன்ற சுற்றுலா தளங்கள் சோழ மண்டலத்தில் இருப்பதால்,சுற்றுலாவையும்,தொழில்  வளர்ச்சியையும் கருத்தில்  கொண்டு  நாகூர்  அல்லது   வேளாங்கண்ணியிலிருந்து நாகப்பட்டினம்  திருவாரூர்  வழியாக  மும்பை, டெல்லி,  கொல்கத்தா போன்ற   நகரங்களுக்கு இரயில் போக்குவரத்தை ஏற்படுத்தி தருமாறு இரயில்வே அமைச்சகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

          மயிலாடுதுறையிலிருந்து   திருவாரூர்   வழியாக   காரைக்குடி   சென்று கொண்டிருந்த இரயில் நிறுத்தப்பட்டுள்ளது. அகல இரயில் பாதை பணிகளை தீவிரப்படுத்தி விரைந்து அந்த இரயில்  போக்குவரத்தை  மீண்டும் தொடங்கி   அதை   மதுரை வரை   நீட்டிக்க  வேண்டும் என இம்மாநாடு  இரயில்வே  அமைச்சகத்தை   கேட்டுக்கொள்கிறது.

10.மீனவர்களின் பிரச்சினை:

          புதிய   மீன்பிடி   மசோதா ஒன்றை விரைவில் மத்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.   இச்சட்டம்   மீனவர்களின்  பாரம்பரிய உரிமையை பாதிப்பதோடு அவர்களின் வாழ்வுரிமையை   பறித்து  பன்னாட்டு  நிறுவனங்களிடம்  அடமானம் வைக்கும் மோசடி சட்டம் என்பதால் அதை எந்த   வடிவிலும்   மத்திய   அரசு   கொண்டு   வரக்கூடாது   என  இம்மாநாடு எச்சரிக்கிறது.

          தமிழக மீனவர்களை  தொடர்ந்து தாக்கி உயிர்களையும் உடைமைகளையும் தொடர்ந்து பறித்து  வரும் இலங்கை  கடற்படையை   இம்மாநாடு  வன்மையாகக்   கண்டிக்கிறது . இதனை தடுத்து    நிறுத்தும்   வகையில்    சர்ச்சைக்குறிய   கடற்பகுதியில்  இந்திய   கடற்படை   ரோந்து  சுற்றித மி ழ க   மீனவர்களை   காக்க   வேண்டும்  எ ன  இம்மாநாடு   ம த் தி ய  மாநில   அரசுகளை கேட்டுக்கொள்கிறது.

11. முல்லை பெரியாறு விவகாரம்:

          முல்லை  பெரியாறுக்கு  குறுக்கே  புதிய  அணையை  கட்ட நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி கேரள   அரசு மறைமுக   வேலைகளை  தொடங்கி நடத்தி வருகிறது. இதற்கு மத்திய அரசு மறைமுகமாகத்    துணைபோகிறதோ   என்ற  அய்யம்  தமிழக   மக்களுக்கு   ஏற்பட்டிருக்கிறது. இவ்விசயத்தில் எந்த நிலையிலும் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க   முடியாது  என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.  மத்திய  ஆட்சியில் பங்காளியாக இருக்கும்  திமுக  தனது செல்வாக்கை    பயன் படுத்தி  இவ்விசயத்தில்    உறுதியாக    செயல்பட   வேண்டும்  என்றும்  அனைத்து  கட்சிகளும்   இத்தகைய   முயற்சிக்கு   ஆதரவாக  இருக்க  வேண்டுமென்றும் இம்மாநாடு  அனைவரையும்  கேட்டுக்கொள்கிறது.

12. புதிய பாலம் தேவை:

          திருவாரூரில் பழைய நாகை சாலையிலுள்ள இரயில்வே லெவல் கிராசிங் அமைந்துள்ள சிறிய  மேம்பாலத்தில்  அடிக்கடி  விபத்து  நடப்பதாலும்,  பல உயிர்கள் பலியாகியுள்ளதாலும் அந்த பாலத்தை இடித்து விட்டு புதிய அகல மேம்பாலத்தை கட்டித்தருமாறு இம்மாநாடு அரசை வற்புறுத்துகிறது.

13. தடுப்பணைகள் தேவை:

          காவிரி   நதி  கடலை   நோக்கி  ஓடிவரும்  மாவட்டங்களான  தஞ்சை,  திருவாரூர், நாகை மாவட்டங்களில்    மழைகாலத்தில்   பல வீனிளீ தண்ணீர் கடலில்  வீணாய்  கலக்கிறது.   இதை தடுக்கும் நோக்கிலும் திருவாரூர் மற்றும் தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓடும் காவிரி ஆறு மற்றும் வாய்க்கால்களில் சிறிய தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

14. ஆட்டோ கட்டண கட்டுப்பாடு:

          திருவாரூர்   நகரில்   ஓடும் ஆட்டோக்கள் வரம்பில்லாமல் அதிக கட்டணத்தை வசூலித்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் மாவட்ட நிர்வாகமும் வட்டார போக்குவரத்து அதிகாரியும் தலையிட்டு ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

15. ரியல் எஸ்டேட்டுக்கு கட்டுப்பாடு:

          விவசாயத்தில்   தொடரும்   சோதனைகளால்  விரக்தி  அடைந்த  விவசாயிகளிடமிருந்து விளை   நிலங்களை   விலைக்கு   வாங்கி   ரியல்   எஸ்டேட்    செய்யப்படுவதை    இம்மாநாடு  கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.   விவசாய நிலங்கள்  தொடர்ந்து  ரியல் எஸ்டேட்  தொழிலால் காங்கிரிட்   பிரதேசங்களாக   மாறினால்  தேசம் மிகப்பெரிய  உணவு   நெருக்கடியை  சந்திக்க நேரிடும் . எனவே விளை நிலங்களை  பாதிக்கும் வகையில் ரியல் எஸ்டேட் போடுவதற்கு அரசு தடை  விதிப்பதோடு  அரசாங்கமும்  விளை  நிலங்களை   கையகப்படுத்தக்   கூடாது   என இம்மாநாடு  கேட்டுக்கொள்கிறது.

16. மத்திய பல்கலை கழகம், மருத்துவக்கல்லூரி வரவேற்பு:

          திருவாரூரில்   மத்திய   பல்கலைகழகமும்   மருத்துவக்   கல்லூரியும்   அமைய  முயற்சி எடுத்தமைக்காக    தமிழக   அரசுக்கு   இம்மாநாடு    நன்றி   தெரிவிக்கிறது.   கடைநிலையில்  இருக்கின்ற   மக்களுக்கு   தரமான  கல்வியும்,   மருத்துவமும்  பரவலாக்கப்பட வேண்டுமென இம்மாநாடு   வேண்டுகோள்   விடுக்கிறது.

17. இலங்கை தமிழர் பாதுகாப்பு:

          உள்நாட்டுப்போரால்   சீரழிக்கப்பட்டுள்ள  இலங்கையின்  சிறுபான்மை  மக்களான  நம் தமிழ்ச்   சொந்தங்களுக்கு    இ ம் மா நா டு     ஆதரவையும்    ஆறுதலையும்     தெரிவிக்கிறது.இலங்கையில்   ஆயுதப்போராட்டம்   முடிவுக்கு   வந்துள்ள நிலையில் இலங்கை அரசு சிங்கள பேரின  வாத   வெறியுடன்   தமிழர்களை    நசுக்காதிருக்க    இந்திய  பேரரசு   உளப்பூர்வமான நடவடிக்கைகளை   மேற்கொள்ள  வேண்டும்   என  இம்மாநாடு   வழியுறுத்துகிறது.   ஆயுத   குழுக்களாலும்    சிங்கள   வெறியர்களாலும்   சீரழிக்கப்பட்டுள்ள    இலங்கையின்   முஸ்லிம் தமிழர்கள்,    மலையக   தமிழர்கள்,   ஈழத்தமிழர்கள்    உள்ளிட்ட    அனைத்து   தமிழர்களின் வாழ்வுரிமையும், வாழ்க்கை   பாதுகாப்பும்  உறுதி  செய்யப்பட இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை  உடனே  எடுக்க  வேண்டும்  எனவும்  இம்மாநாடு  வழியுறுத்துகிறது.

18.படுகுழிகளை மூட வேண்டும்:

          பாதாள சாக்கடை திட்டம் என்ற  பெயரில்  திருவாரூர்  முழுவதும்  படுகுழிகளாக்கப்பட்டு அவை   இன்னும் மூடப்படாமல் பொது   மக்களுக்கு  அபாயம்  ஏற்படுத்திக் கொண்டிருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் திருவாரூரின் பல பகுதிகளிலும் வாகனங்கள் எளிதாக    செல்ல    முடியாத   அவதி     தொடர்ந்து  வருகிறது.     இதனால்    நோயாளிகளும், கர்பிணிகளும், முதியவர்களும்,  மாணவர்களும்   பெரும் துயரத்தை  சந்தித்து  வருகின்றனர். உடனடியாக   திருவாரூர்  நகராட்சி நிர்வாகம் தோண்டிய   பள்ளங்களை   மூடவேண்டும்   என இம்மாநாடு வழியுறுத்துகிறது.

19. சேதுக்கால்வாய்:
    
            ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சாமல் தமிழகத்திற்குப் பெரும் நன்மை பயக்கக்கூடிய சேதுக் கால்வாய்த்     திட்டத்தை  மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிது.

20.சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் சுயநிதி பிரிவு ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம்:

          தமிழகத்தில் கடந்த  20 ஆண்டுகளாக   தரம் உயர்த்தப்பட்ட   வகுப்புகள்   மற்றும் புதிய பாடப்பிரிவுகளில்    பணியாற்றும்   ஆசிரியர்களுக்கு   ஊதியம் அளிப்பதற்கு அரசு மாணியம் அளிக்க மறுத்து வருகின்றது.  அரசின்  இந்த   பாரபட்ச   போக்கை இம்மாநாடு வண்மையாக கண்டிக்கிறது.     இப்பள்ளிகள்    பெரும்பாலும்       தமிழ்வழி   பள்ளிகளாகவும்    மொழிவாரி சிறுபான்மையினர்   நடத்தும்   பள்ளிக்கூடங்களாக   இருந்து வருகின்றன. தமிழ் செம்மொழி மாநாடு   நடத்தும்   தமிழக   அரசு   ஆண்டுக்கு   ரூபாய்   100   கோடிக்கும்      குறைவாகவே தேவைப்படும்     மாணியத்தை     வழங்கி    தமிழ்வழி      பள்ளிகளில்   பணியாற்றும் சுயநிதி ஆசிரியர்களின் துயரத்தை நீக்க வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.

21.பணநாயகமாக மாறியுள்ள ஜனநாயகம்:

          உலகின் மிகப்பெரும் ஜனநாயகமான இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில்   பணம்   ஜனநாயகத்தை   குழித் தோண்டி   புதைக்கும் அவல நிலையை நீக்க இரும்பு   கரம்   கொண்டு    தேர்தல்   ஆணையம்    செயல்பட     வேண்டுமென     இம்மாநாடு கோருகின்றது.

 22. தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை கொடுக்க வேண்டும்.  ஒருநாள் கூலி ரூபாய் 150/- கொடுக்க வேண்டும். மேற்படி வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைய வேண்டும். ஊழலற்ற திட்டம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 23. குடியிருக்க இடம் இல்லாத  பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை, ஆதிதிராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இலவச  துவீட்டு மனைகளை அதிகாரிகளே அபகறித்துக்  கொள்வதை தடுத்து ஒடுக்கப்பட்ட       உழைக்கும்       மக்களுக்கு   இலவச     வீட்டுமனைகள் கொடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்