மாவட்ட செய்திகள்

அரசியலமைப்பு சட்டம்



தகவல் பெறும் உரிமைச்சட்டம்
தகவல் அறியும் உரிமை:
       
         இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு வலுச் சேர்க்கும் விதமாக கடந்த 2005 ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.
          இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அரசு மற்று அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். இங்கு தகவல் என்பது பலதரப்பட்ட அர்த்தங்களைக் கொண்டது. அதாவது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ-மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே 'தகவல்' என்ற பிரிவின்கீழ் வைக்கப்படுகின்றன. அரசுத்துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால், அதைக்கூடக் கேட்டுப் பெற முடியும். எடுத்துக்காட்டாக. ஒரு தனியார் நிறுவனத்தின் ஆண்டுக் கணக்கு, இயக்குனர் குழுமம் உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டுமானால், கம்பெனிகளுக்கான பதிவாளர் அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுச் செய்யலாம். இதேபோல், அறக்கட்டளை, அரசு சாரா நிறுவனம் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அறக்கட்டளை ஆணையர் அலுவலகத்தை அணுகிப் பெற முடியும். தகவல்களைப் பெறுவது நமக்கு எந்தவகையில் உதவும் என்று கேள்வி எழலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிவதால், அரசு நிர்வாகத்தால், வெளிப்படைத்தன்மையும், பொறுப்பும் அதிகரிக்கிறது. இதனால், லஞ்சமும் ஊழலும் குறைகின்றன.
         அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் தகவல்கள் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஏதாவது குறைகள் இருப்பின் அதைக் களைய வேண்டும் என்ற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் ஜனநாயகத்தில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள வழி ஏற்படுகிறது.
          தகவல் பெறும் உரிமைச்சட்டம், 2005: மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இந்த நோக்கத்தை எய்துவதற்கும், குடிமக்கள் ஒவ்வொருவரும், அரசு(அல்லது) அரசு சார்ந்த அலவலகங்களிடமிருந்து தகவல் பெறுவதற்கும் ஏதுவாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். தற்போது,தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005-ஐ, ஐம்மு-காஷ்மீர் மாநிலம் நீங்கலாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், அக்டோபர் மாதம் 2005-ல் முழுமையாக நடைமுறைப்படுத்த, மத்திய அரசால் சட்டம் வெளியிடப் பட்டுள்ளது. அரசு அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்கும் வகையில் இச்சட்டம் உள்ளது. எனவே அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல் திறனிலும், வெளிப்படையான நிலை, செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலங்களின் கட்டுப்பாட்டிலுள்ள தகவல்களை குடிமக்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொ்ள வழி செய்யும் சட்டமே தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 ஆகும்.
          2005 ஆம் ஆண்டின் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கண்காணித்தல் மற்றும் செயலாக்கம் தொடர்பான பொருள் பொதுத்துறையிலிருந்து, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறைக்கு அரசாணை நிலை எண்.1365, நாள். 21.11.2006ன் மூலம் மாற்றப்பட்டுள்ளது. இத்துறையில், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் செயலாக்கம் மற்றும் நிருவாகம், அதன் தொடர்புடைய அறிவுரைகள், ஆணைகள், விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. இச்சட்டம் தொடர்பாக ஏதேனும் விளக்கம் அல்லது தெளிவுரை வேண்டின் பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை (நி.சீ.3) என்ற பிரிவிலிருந்து உரிய தகவலைப்பெறலாம். பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறையின் சிறப்பு ஆணையாளர் மற்றும் அரசு செயலாளர் அவர்கள் இச்சட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் ஆவார். இச்சட்டத்தின் கண்காணித்தல் மற்றும் செயலாக்கத்திற்காக துணைச்செயலாளர் (த.பெ.உ.ச.) மற்றும் சார்புச்செயலாளர் (த.பெ.உ.ச.) ஆகியோர் தனியே நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டத்தின் நோக்கங்கள்: அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்; அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல். அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை ஊழலை ஒழித்தல் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல். பொது தகவல் அலுவலர் மற்றும் உதவி பொது தகவல் அலுவலர் நியமனம்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு (1)ன்படி, தகவலுக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, தகவல் அளிக்க ஏதுவாக, ஒவ்வொரு அலுவலகங்களிலும், பொது தகவல் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். மேலும் உட்பிரிவு 2ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றை பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
          (தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் தகவல் பெறுவதற்காக பொது தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், நிகரி எண் போன்றவைகள் தரப்பட்டுள்ளன.
அரசுப் பணிகளைப் பார்வையிடுவதற்கான விண்ணப்பம்:
          தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி விண்ணப்பிக்க தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. ஒரு வெள்ளைத் தாளில் கீழ்கண்ட மாதிரி எழுதி விண்ணப்பிக்கலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அரசுப் பணிகளைப் பார்வையிட விண்ணப்பம் அனுப்புநர் (விண்ணப்பதாரரின் பெயரும், முகவரியும் குறிப்பிடவேண்டும்) பெறுநர் (உரிய அலுவலகத்தின் பொதுத்தகவல் அலுவலர்/ உதவி பொதுத்தகவல் அலுவலர் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்) உதராணத்துக்கு, பொதுத் தகவல் அலுவலர், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகம், சென்னை. ஐயா, நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 2(ஜே)(ஐ) படி கீழ்கண்ட பணிகளைப் பார்வையிட அனுமதிக்க வேண்டுகிறேன். உதாரணத்துக்கு... சென்னை ஆற்காடு சாலையில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் பாலக் கட்டுமானப் பணிகள். ஆய்வு நேரத்தின்போது, பணிகள் தொடர்பான கீழ்க்கண்ட ஆவணங்களையும் பார்வையிட விரும்புகிறேன். அளவீட்டுப் புத்தகம் மதிப்பீட்டு விவரங்கள் வரைபடங்கள் நான் தகவல் அறியும் கட்டணங்கள் செலுத்தியுள்ளேன், அதன் விவரங்கள் கீழ்வருமாறு (வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு உண்டு - அதற்கான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்). இந்த விண்ணப்பம் உங்கள் துறை சார்ந்தது அல்ல எனில், உரிய தகவல் அலுவலரின் பார்வைக்கு இந்த மனுவை அனுப்பி வைத்துவிட்டு, எனக்குத் தெரியப்படுத்தவும். கட்டணம் செலுத்தியதற்கான சான்றுகளை இணைத்துள்ளேன். இடம்: நாள்: விண்ணப்பதாரர் கையொப்பம் தகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி: தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல்களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. எனினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ்கண்ட மாதிரி எழுதி விண்ணப்பிக்கலாம். இதைக் கேட்கும் தகவலுக்கேற்ப மற்றும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். அனுப்புநர் (விண்ணப்பதாரரின் பெயரும், முகவரியும் குறிப்பிடவேண்டும்) பெறுநர் (உரிய அலுவலகத்தின் பொதுத்தகவல் அலுவலர்/ உதவி பொதுத்தகவல் அலுவலர் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்) ஐயா/அம்மையீர், தயவு செய்து கீழ்க்கண்ட தகவல்களை கொடுக்கவேண்டி கேட்டுக்கொள்கிறேன். தகவல் விவரம் 2. நான் கீழ்கண்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டுகிறேன். ( பார்வையிட விரும்பும் ஆவணங்கள் ) 3. எனக்கு கீழ்கண்ட ஆவணங்களின் படிகளை கொடுக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். (ஆவணங்களின் விவரம்) 4. நான் தகவல் அறியும் கட்டணங்கள் செலுத்தியுள்ளேன், அதன் விவரங்கள் கீழ்வருமாறு கட்டணம் செலுத்தியதற்கான சான்றுகளை இணைத்துள்ளேன். 5. எனக்கு மேற்கண்ட தகவல்கள் / ஆவணங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன. விரைவில் எனக்கு கொடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இடம் நாள் விண்ணப்பதாரர் கையொப்பம் கோரிக்கையின் மீதான நடவடிக்கைகள்: கோரிக்கை பெற்ற 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு தகவல் அளிக்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்க மறுக்குமிடத்து, தகவல் பெறும் உரிமை சட்டம் 2005, பிரிவுகள் 8 மற்றும் 9ல் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பொருத்தமான காரணத்தைச் சுட்டிக்காட்டி நிராகரிக்க வேண்டும். கோரப்பட்ட தகவலானது, ஒருவருடைய உயிர் அல்லது சுதந்திரம் தொடர்புடையதாகயிருப்பின், அதற்கான கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள், தகவல் அளிக்கப்படுதல் வேண்டும். குறிப்பிட்ட கால கெடுவிற்குள் கோரப்பட்ட தகவலின் பேரில் முடிவு எதனையும் அளிக்க தவறுமிடத்து, சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர், அக்கோரிக்கையினை ஏற்க மறுத்ததாகவே கருதப்படும். கோரிக்கையின் மீது தகவல் அளித்தல் குறித்து முடிவு எடுக்குமிடத்து, பொதுத்தகவல் அலுவலர் அந்த தகவல் அளிப்பதற்கான கூடுதலான கட்டணம் ஏதேனுமிருப்பின், அதைச் செலுத்தக் கோரி விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவரத்தினை அனுப்புவதற்கும், கூடுதலான கட்டணத்தை செலுத்துவதற்கும் இடையே உள்ள காலத்தினை ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட 30 நாட்கள் கால அளவையில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. மேல் முறையீட்டு அலுவலர், மேல் முறையீட்டிற்கான காலக்கெடு, அதனை செயல்படுத்தவேண்டிய முறை மற்றும் விதிக்கப்பட்ட கட்டணங்கள் உள்ளடங்கிய விவரங்களை, முடிவின் மீதான மறு ஆய்விற்காக, மனுதாரருக்கு அளித்தல் வேண்டும். மனுதாரர் புலன் சார்ந்த ஊனமுற்றவராக இருக்குமிடத்து, பொது தகவல் அலவலர், அவருக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பார்வையிடுவதற்கு உரிய உதவிகள் அளித்தல் வேண்டும். தகவல்கள் அச்சடிக்கப்பட்ட படிவத்தில் அல்லது மின்னணு படிவத்தில் இருக்குமிடத்து, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விண்ணப்பதாரர் செலுத்துதல் வேண்டும். மேற்கூறிய கட்டணங்கள் அனைத்தும், நியாயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மனுதாரர் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள நபராக இருக்குமிடத்து, மேற்கூறிய அனைத்து கட்டணங்களையும் அவரிடமிருந்து வசூலிக்கக் கூடாது. பொது தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவலை அளிக்க தவறுமிடத்து, தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 7 உட்பிரிவு 5ன்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு அந்த தகவலை அளிக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையின் மீது தகவல் அளிக்க முடிவெடுக்கும் முன்னர், பொது தகவல் அலவலர், இச்சட்டத்தின் பிரிவு 11ன் கீழ் உட்பட்டு, மூன்றாம் தரப்பினரால் செய்யப்பட்ட முறையீட்டினையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். மனுதாரரின் விண்ணப்பத்தினை நிராகரிக்குமிடத்து, விண்ணப்பதாரருக்கு பொதுத் தகவல் அலுவலர் கீழ்க்கண்ட தகவல்களையும் தெரிவித்தல் வேண்டும்:- 1. விண்ணப்பத்தினை மறுப்பதற்கான காரணங்கள்; 2. அவ்வாறு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு எந்த கால கெடுவுக்குள் செய்யப்பட வேண்டும்; 3. மேல் முறையீட்டு அலுவலர் குறித்த விவரங்கள். அரசின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் தகவல்கள் மற்றும் வள ஆதாரங்களை திசை திருப்பக்கூடிய தகவல்களைத் தவிர, ஏனைய தகவல்களை, அதற்குரிய சாதாரண படிவத்திலேயே வழங்கலாம். கட்டணங்கள்: தகவல் உரிமை சட்டம் 2005, நியாயமான விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று கூறுகிறது. மேலும், தகவல் அளிப்பதற்கான கூடுதலான கட்டணம் தேவைப்பட்டால், எவ்வாறு அத்தொகைக் கணக்கிடப்பட்டு அக்கட்டணம் எட்டப்பட்டது என்று சுட்டிக்காட்டி, எழுத்துருவில் விண்ணப்பத்தாரருக்கு தெரிவிக்கப் படுதல் வேண்டும். விண்ணப்பதாரர் பொதுத்தகவல் அலுவலரால் விதிக்கப்பட்ட கட்டண நிர்ணய முடிவின் மீது, உரிய மேல்முறையீட்டு துறையிடம் மறுஆய்வு செய்யுமாறு நாடலாம். வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்பவருக்கு, கட்டணம் விதிக்கப்படுதல் கூடாது. பொதுத்தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவலை அளிக்கத் தவறினால், கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு அத்தகவலை வழங்குதல் வேண்டும். இச்சட்டத்தின் 6(1) பிரிவின்படி தகவலுக்கான ஒவ்வொரு விண்ணப்பமும் அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகத்தால் குறித்துரைக்கப்பட்ட கணக்குத் தலைப்பில், ரூ. 10/- (ரூபாய் பத்து மட்டும்) ரொக்கமாகவோ, வரைவு காசோலையாகவோ, கருவூல சீட்டு அல்லது வங்கி வரைவோலையாகவோ சேர்த்து அனுப்பப்படுதல் வேண்டும். இச்சட்டத்தின்7(1)ம் பிரிவின்படி தகவல் வழங்குவதற்காக அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களால் பின்வரும் விகிதங்களில் குறித்துரைக்கப்பட்டவாறு கணக்குத்தலைப்பில் சரியான ரொக்க ரசீது வரைவு காசோலை, வங்கி காசோலை வழியே விதிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்படுதல் வேண்டும். அவை முறையே:- 1. ஏ4, ஏ3 அளவுத்தாளில் எழுதி உருவாக்கப்பட்ட அல்லது படியெடுக்கப்பட்ட ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூபாய் இரண்டு; 2. பெரிய அளவுத் தாளுக்கான படி ஒன்றின் உள்ளபடியான கட்டணம், செலவுத்தொகை; 3. மாதிரிகள் அல்லது மாதிரி படிவங்களுக்கான உள்ள செலவு அல்லது விலை; 4. பதிவுருக்களை ஆய்வு செய்வதற்கு, முதல் ஒரு மணிநேரத்திற்கு, கட்டணம் எதுவும் இல்லை. அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு அல்லது அதன் பின்னம் ரூ.5 கட்டணம் ஆகும். இச்சட்டத்தின் 7(5)ம் பிரிவின்படி தகவல் வழங்குவதற்காக, அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களால், பின்வரும் விகிதங்களில் குறித்துரைக்கட்டவாறு கணக்குத்தலைப்பில் சரியான ரொக்க ரசீது, வரைவு காசோலை, வங்கி காசோலை வழியே விதிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்படுதல் வேண்டும். அவை முறையே, 1. மின்னணு வழியிலான டிஸ்கெட்/பிளாப்பி ஒன்றிற்கு ரூ. 50 கட்டணம்; 2. அச்சடித்த படிவத்தில் தகவல் வழங்குகைக்கு வெளியீட்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட விலை தகவலினை வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பு: குடிமக்கள் எவருக்கும் கீழ்க்கண்ட தகவலை அளிக்கத் தேவையில்லை:- இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, படைத்திறன், அறிவியல் அல்லது பொருளாதாரம் சார்ந்த நலன்கள், அயல் நாட்டுடன் கொண்டுள்ள உறவை பாதிக்கப்படும் அல்லது குற்றச் செயலினை தூண்டுதலாக அமையும் தகவல்கள் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தால் வெளிப்படையாக தடைசெய்யப்பட்ட தகவல்கள் அல்லது அந்த தகவலை வெளிப்படுத்துவதால் நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையக்கூடிய தகவல்கள்; நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்ற சிறப்புரிமையை மீறுவதாக அமையும் தகவல்கள்; எந்த ஒரு தகவலானது பொது மக்களின் பேரளவு நலனுக்கு அவசியமானது என்று அரசு கருதுகிறதோ அந்தத் தகவல் மற்றும் மூன்றாம் தரப்பினரின் போட்டி நிலைக்கு தீங்காகும் தகவலான வணிக நம்பகத்தன்மை, வியாபார ரகசியங்கள், அறிவார்ந்த சொத்துடமை உள்ளிட்ட தகவல்கள்; பொது மக்களின் நலனுக்கு தேவையானது என்று அரசால் கருதப்படுகிற, தனி நபர் ஒருவருக்கு கிடைத்த நம்பகத்தன்மை உடைய தகவல்கள்; அயல் நாட்டு அரசிடமிருந்து பெறப்பட்ட ரகசிய தகவல்கள்; நாட்டின் பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் மற்றும் சட்டத்தினை செயல்படுத்துவதற்காகவும் கிடைத்த மூலம் மற்றும் உதவி ஆதாரங்களை இனங்காட்டக்கூடிய தகவல்கள்; தனி நபர் உயிர் மற்றும் உடலுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய தகவல்கள்; வெளிப்படுத்தப்பட்டால், புலனாய்வு நடவடிக்கைக்கு அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு தடையாயிருக்கும் அல்லது குற்ற வழக்கு தொடர்தலைத் தடை செய்திடும் தகவல்கள்; அமைச்சர்கள், குழு செயலாளர்கள் மற்றும் பிற அலுவலர்களின் கலந்தாய்வுகள் குறித்த பதிவுருக்கள் உள்ளிட்ட அமைச்சரவை ஆவணங்கள். எனினும் அமைச்சர் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதற்கான காரணங்கள், எதன் அடிப்படையில் அம்முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை, முடிவு எடுக்கப்பட்ட பின்னர், பொது மக்களுக்கு தெரியப்படுத்தலாம்; ஒரு தகவலை வெளியிடுவதால் உள்ள நலன், பாதுகாக்கப்பட்ட நலன்களுக்கான தீங்கை விட மிகுந்து இருக்குமிடத்து, 1923 ம் ஆண்டு அலுவலக சார் ரகசிய சட்டம் 1923 (9/1923) ல் அல்லது தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 8 ன் படி அனுமதிக்கத்தக்க விலக்களிப்புகள் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும் தகவலை அணுகி பெற அனுமதிக்கலாம்; ஒரு விண்ணப்பம் செடீநுயப்பட்ட தேதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம், நிகழ்வு அல்லது நடந்த காரியம் தொடர்பான தகவல்கள், தகவல் சட்டம் 2005 பிரிவு 8 உட்பிரிவு 1 (ஏ, சி, எல்) வகைகளுக்கு உட்பட்டு, கோரிக்கையினை செய்த நபருக்கு தகவல் அளிக்க வேண்டும். இச்சட்டத்தின் கீழ் வகை செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு முறைகளுக்கு உட்பட்டு, அந்த 20 ஆண்டு காலத்தினை கணக்கிடுவதில் பிரச்சனை எழும் பட்சத்தில், மத்திய அரசின் முடிவே இறுதியானதாகும்; தகவலை பெறுவதற்கான கோரிக்கையானது, அரசு அல்லாத தனி நபரிடமிருந்து வருகிற பதிப்புரிமையை மீறுவதாக இருக்குமிடத்து, இச்சட்டம் 8ம் பிரிவின் வகை முறைகளுக்கு பாதிப்பின்றி, அக்கோரிக்கையை நிராகரிக்கலாம். தகவல் வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட பகுதியிலிருந்து பிரித்தளித்தல்: தகவலினை பெறுவதற்கான கோரிக்கையானது, வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப் பட்டிருக்கிற தகவலுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்கிற காரணத்தால் நிராகரிக்குமிடத்து, வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பட்ட பகுதியிலிருந்து, நியாயமான முறையில் பிரித்தளிக்கப்படக் கூடிய தகவல் எதுவும் அளிக்கலாம். அவ்வாறு வழங்குமிடத்து, பொதுத்தகவல் அலுவலர், விண்ணப்பதாரருக்குக் கீழ்க்கண்ட அறிவிப்பை அளித்தல் வேண்டும்:- 1. வெளியிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட தகவலைக் கொண்டுள்ள பதிவுருவிலிருந்து பிரித்தெடுத்தபின், கோரப்பட்ட பதிவுருவின் பகுதி மட்டுமே அளிக்கப்படுகிறது என்றும்; 2. பொருண்மை பற்றிய எந்த முடிவையும் உள்ளடங்கலாக, அந்த முடிவுகளுக்கு ஆதாரமான பொருளைக் குறிப்பிட்டு, அந்த முடிவிற்கான காரணங்கள்; 3. அந்த முடிவினை அளிக்கின்ற நபரின் பெயர் மற்றும் பதவியின் பெயர்; 4. அவரால் கணக்கிடப்பட்ட கட்டணங்களின் விவரங்களையும், விண்ணப்பதாரர் வைப்பீடு செய்யுமாறு கோரப்பட்ட தொகையையும் தெரிவித்தல்; 5. தகவலின் ஒரு பகுதியை வெளியிடாமை தொடர்பான முடிவை, மறு ஆய்வு செய்வதற்கு, பணி மூப்பு அலுவலர் அல்லது மாநில தகவல் ஆணையம் பற்றிய விவரங்கள்,கட்டணத்தொகை, தகவல் பெறும் முறை மற்றும் காலவரம்பு ஆகியவற்றைத் தெரிவித்தல் வேண்டும். விலக்களிக்கப்பட்ட அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்கள்: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு மக்கள் தகவல் பெற அணுகுவதிலிருந்து விலக்களித்துள்ளது. அவை முறையே: 1. தனிப்பிரிவு-குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி. 2. கியூ பிரிவு - குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி. 3. தனிப்பிரிவு 4. பாதுகாப்புப்பிரிவு 5. கோர்செல் சி.ஐ.டி. 6. கருக்கெழுத்து அமைவனம் 7. மாவட்டத்தனிப்பிரிவுகள் 8. காவல்துறை ஆணையரப்புலனாய்வுப்பிரிவுகள் 9. தனிப்புலனாய்வு செல்கள் 10. ஆணையரகங்கள்/ 11. மாவட்டங்களிலுள்ள நக்சலைட்டு தனிப்பிரிவு 12. குற்றப்பிரிவு சி.ஐ.டி. 13. தனிப்புலனாய்வுக்குழு 14. திரைத்திருட்டு பிரிவு 15. போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு அமைவனம் 16. கொள்கைக்கெதிர் பிரிவு 17. பொருளாதாரக் குற்றச்செயல்கள் சரகம் 1, 2 18. சிலைத்திருட்டுத் தடுப்புச் சரகம் 19. சிசிஐ டபிள்யூ குற்றப்புலனாய்வுத்துறை 20. குடிமைப்பொருள் வழங்கல்/குற்றப்புலனாய்வுத்துறை) 21. கணினி குற்றப்பிரிவு 22. மாவட்டக்குற்றம் - மாநகரக்குற்றப்பிரிவுகள் 23. சிறப்புப்பணிப்படை 24. பயிற்சிப்படை மற்றும் பள்ளி 25. கடலோரக் காவல்படை 26. விரல் ரேகைப்பிரிவு 27. காவல் துறை வானொலிப்பிரிவு 28. உள் (காவல் 6) துறை 29. உள் (கடும் மந்தணம்) துறை 30. பொது (கடும் மந்தணம்) புலனாய்வு மற்றும் ஒடுங்கமைவனம். மூன்றாம் தரப்பினரின் தகவல்: பொதுத் தகவல் அலுவலர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்புடையதாக அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட அல்லது மூன்றாம் தரப்பினரால் ரகசியம் எனக்கருதப்படுகிற தகவல்கள், பதிவுருக்கள் அதன் பகுதிகள் எதனையும் வெளியிடுமிடத்து, அக்கோரிக்கை பெற்ற ஐந்து நாட்களுக்குள், அக்கோரிக்கையினைப் பற்றியும், அந்த தகவலை வெளியிட விரும்புகிறாரா என்றும் மூன்றாம் தரப்பினருக்கு எழுத்து வடிவிலான அறிவிப்பை அளிக்க வேண்டும். அதனுடன் மேற்படி தகவலை வெளியிட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது பற்றி எழுத்து வடிவிலோ அல்லது வாய்மொழியாகவோ தனது கருத்தினை அனுப்புமாறு மூன்றாம் தரப்பினரைக் கோருதல் வேண்டும். மேலும், அந்த தகவலை வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கும்போது, மூன்றாம் தரப்பினரால் அளிக்கப்பட்ட கருத்தினை கவனத்தில் கொள்ளல் வேண்டும். மேற்படி அறிவிப்பு சார்பு செய்யுமிடத்து, அந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள், அந்தத் தகவலை வெளியிடுவதற்கு எதிராக முறையீடு செய்வதற்கு மூன்றாம் தரப்பினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பொதுத் தகவல் அலுவலர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்புடைய தகவல்களை வெளியிடுவது குறித்து முடிவு எடுத்து, அம்முடிவைப் பற்றிய அறிவிப்பை, மூன்றாம் தரப்பினருக்கு எழுத்து வடிவில் அளிக்க வேண்டும். அதனுடன் அம்முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் உரிமையையும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும். மாநில தகவல் ஆணையத்தின் கடமைகள் மற்றும் அதிகாரங்கள்: இச்சட்டத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்காக, பிரிவுகள் 12(1)-15(1) மைய மாநில தகவல் ஆணையங்கள் தனித்தியங்கும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் பெறும் உரிமைச்சட்டம் பிரிவு 15-ன் படி, தமிடிநநாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமை ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீடிந 07.10.2005 முதல் இயங்கி வருகிறது. எந்த ஒரு நபரிடமிருந்தும் கீடிநக்காணும் நிலைமைகளில் புகார்களைப் பெற வேண்டியது, மாநில தலைமைத் தகவல் ஆணையத்தின் கடமையாகும்:- 1. பொதுத் தகவல் அலுவலர் நியமிக்கப்படாததால் தகவல் கோரி விண்ணப்பிக்க இயலாத நிலைமை; 2. கோரப்பட்ட தகவல்கள் மறுக்கப்பட்ட நிலைமை; 3. தகவல் கோரி விண்ணப்பித்தும் அதற்குரிய காலக்கெடு கடந்த பின்பும் எந்த பதிலும் அளிக்கப்படாத நிலைமை; 4. நிர்ணயிக்கப்பட்ட கூடுதல்கட்டணம் நியாயமற்றதாக ஒருவர் கருதும் நிலைமை; 5. தனக்கு வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானதல்ல என்றோ, தவறான தகவல்கள் வழங்கப்பட்டன என்றோ ஒருவர் நினைக்கும் நிலைமை. இச்சட்டம் பிரிவு 18 ன்கீடிந ஆணையம் விசாரணை தொடங்கலாம். நியாயமான காரணங்களின்கீடிந, உரிய விசாரணைக்கு உத்தரவிடுதல் வேண்டும். இப்பிரிவின் படி, ஒரு கோரிக்கையை விசாரிக்கையில், குடிமையியல் நீதிமன்றங்களுக்கு நிகரான அதிகாரங்கள் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவை முறையே: 1. நபர்களின் வருகைக்கு அழைப்பாணை அனுப்பி வலிந்து செயல்படுத்துதல்; வாய்மொழி அல்லது எழுத்து பூர்வமான சாட்சியத்தை கொடுக்கவும் மற்றும் ஆவணங்களையும், பொருள்களையும் முன்னிலைப்படுத்த கட்டாயப்படுத்துதல்; 2. ஆவணங்களை கண்டறிந்து ஆய்வு செய்திட ஆணையிடுதல்; 3. பிரமாணப்பத்திரங்கள் மூலம் சாட்சியங்கள் பெறுதல்; 4. சாட்சிகள் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக அழைப்பாணை பிறப்பித்தல்; 5. குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் பொருள் குறித்து; 6. இச்சட்டத்தின்படி, அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களிலுள்ள பதிவுருக்கள் எதனையும் ஆடீநுவு செடீநுயலாம் மற்றும் அத்தகைய பதிவுருக்களை எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படலாகாது. கீழ்க்கண்ட அறிவுப்புகள் மூலம் ஆணையம் தனது முடிவுகளை இச்சட்டத்தின் பிரிவு 19(8) வகைமுறைகளுக்கு உட்பட்டு, சம்மந்தப்பட்ட அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவை முறையே, 1. குறிப்பிட்ட வடிவத்தில் தகவலை வேண்டுமிடத்து, அவற்றினை அவ்வடிவத்திலேயே அணுகிப் பெறுதல் ; 2. நேர்விற்கேற்ப, பொது தகவல் அலுவலர் ஒருவரை நியமித்தல் ; 3. குறித்த சில தகவலை அல்லது தகவலின் வகைகளை வெளியிடுதல் ; 4. பதிவுருக்களைப் பராமரித்தல், நிர்வகித்தல் மற்றும் அழிப்பதற்கு தொடர்புடைய நடைமுறைகளில், அவசியமான மாற்றங்களைச் செய்தல் ; 5. அலுவலர்களுக்கு, தகவல் பெறும் உரிமை சட்டம் மீதான பயிற்சிக்கு வகை செய்தலை மேம்படுத்துதல் ; 6. ஆண்டறிக்கை தயாரித்து அளித்தல். மேலும் ஆணையத்திற்கு தனது முடிவின் மீது கீடிநக்கண்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன :- 1. இழப்பு அல்லது பாதிப்பு உண்டாக்கிய பிற கேடு எதுவாகிலும், முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்குமாறு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களை வேண்டுறுத்தும் அதிகாரம் ; 2. இச்சட்டத்தின்படி வகைசெய்யப்பட்ட தண்டனைகளில் எதனையும் விதிக்கும் அதிகாரம் ; 3. விண்ணப்பத்தினை ஏற்கவோ, மறுக்கவோ உண்டான அதிகாரம், இச்சட்டப்பிரிவு 19 (9)ன்படி, ஆணையம், மேல்முறையீட்டாளருக்கும், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களுக்கும், தனது முடிவைக் குறித்த அறிவிப்பினைக் கொடுத்தல் வேண்டும் அதனுடன் மேல்முறையீடு செடீநுவதற்கான உரிமை பற்றியும் கொடுத்தல் வேண்டும். பிரிவு 19(10)-ன்படி வகுத்துரைக்கப்பட்ட நடைமுறைக்கிணங்க, ஆணையம் மேல்முறையீட்டினை முடிவு செய்தல் வேண்டும். மேல்முறையீடு: முதல் மேல்முறையீடு : குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள், கோரிக்கையின் மீது முடிவு பெற்றிராத அல்லது பொது தகவல் அலுவலர் முடிவின் மீது அதிருப்தி அடைந்த எவரும், அத்தகைய கால அளவு முடிவு பெற்றதிலிருந்தோ அல்லது அத்தகைய முடிவினை பெற்றதிலிருந்தோ, 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட துறையில், குறிப்பிட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு மேல் மட்டத்திலுள்ள ஒரு முதுநிலை அதிகாரியிடம் மேல் முறையீடு செடீநுயவேண்டும். எனினும் தவிர்க்க இயலாத காரணத்தினால் தாமதமாக முறையீடு செடீநுதால். விசாரணை அலுவலர் அந்த முறையீட்டை விசாரணைக்கு ஏற்கலாம். இதனை விசாரணை அலுவலர் முடிவு செய்வார். இச்சட்டத்தின் பிரிவு 11ன்படி, மூன்றாம் தரப்பினர் தகவலை வெளிப்படுத்துவதற்கு, பொது தகவல் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செடீநுயுமிடத்து, ஆணையின் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், சம்மந்தப்பட்ட மூன்றாம் தரப்பினர் மேல்முறையீடு செடீநுது கொளல் வேண்டும். இரண்டாம் மேல் முறையீடு : முதல் மேல் முறையீட்டின் மீது முடிவு எடுக்கப்பட்ட தேதியிலிருந்தோ அல்லது அந்த முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்தோ 90 நாட்களுக்குள் அந்த முடிவுக்கு எதிராக மாநிலதகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்ய உரிமையுண்டு மேலும் தாமதத்திற்கு உரிய காரணம் தெரிவிக்கப்பட்டால், 90 நாட்கள் கழிந்த பின்னரும் மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளலாம். முதல் மேல் முறையீட்டில் மூன்றாம் தரப்பினரின் தகவல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டிற்கு எதிராக பொது தகவல் அலுவலரின் முடிவு இருக்கும் பட்சத்தில், மாநில தகவல் ஆணையம் மூன்றாம் தரப்பினருக்கு கேட்கப்படுவதற்கு நியாயமான வாய்ப்பளித்தல் வேண்டும். இச்சட்டப்பிரிவு 19 உட்பிரிவு (1) மற்றும் (2)ன் படியான மேல்முறையீடானது, எழுதி பதிவு செய்யப்படவேண்டிய காரணங்களுக்காக, மேல்முறையீடு பெறப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் அல்லது அது தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மொத்தம் 45 நாட்களுக்கு மேற்படாது, முடிவு செய்யப்படுதல் வேண்டும். தகவல் ஆணையத்தின் முடிவு கட்டுப்படுத்துவதாக இருக்கும். மேல்முறையீட்டு மாதிரி விண்ணப்ப படிவம் பெறுநர் ( தகுதியுடைய அதிகாரி பற்றி குறிப்பிடப்படவேண்டும்) 1) விண்ணப்பதாரரின் முழுப்பெயர் : 2) முகவரி : 3) வேண்டப்படும் தகவல் விவரங்கள் : 4) வேண்டப்படும் தீர்வு : 5) தகவல் தொடர்புடைய துறை அல்லது அலுவலரின் பெயர்: 6) தகவலின் பொருண்மை : 7) தகவல் தொடர்புடைய பகுதி/ஆண்டு/இடம் : 8) தகவல் வேண்டப்படுவதின் நோக்கம் : இடம் : நாள் : விண்ணப்பதாரரின் ஒப்பம் தண்டனைகள்: மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும் தீர்மானிக்கும்போது: 1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம் ஒன்றினை மறுக்குமிடத்தும் ; 2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க மறுக்குமிடத்தும் ; 3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினை உள்நோக்கத்துடன் மறுக்குமிடத்தும் ; 4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ; 5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும். எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும். பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சார்ந்ததாகும். மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக, அவருக்கு பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும். தகவல் பெறுவதற்கான படிகள் சுருக்கமாக: 1. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 , பிரிவு 5ன் கீழ் பொது தகவல் அலுவலரிடம் மனு செய்தல் (சட்டப் பிரிவு 7(1)ன்படி தகவல் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் ) 2. இச்சட்டப் பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீடு மேல் முறையீட்டு அலுவலருக்கு விண்ணப்பித்தல் (முதுநிலை பொது தகவல் அலுவலர்) விண்ணப்பம் பெற்ற 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட வேண்டும். சில நேர்வுகளில் 45 நாட்களுக்குள் தகவல் அளிக்கலாம். 3. இச்சட்டப் பிரிவு 19(3)ன்கீழ் 2வது மேல் முறையீடு தமிழ் நாடு தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். (முதல் மேல்முறையீட்டு அலுவலரின் ஆணை பெற்ற 90 நாட்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பிக்க வேண்டும் ) 4. இச்சட்டப் பிரிவு 19(9)ன்கீழ் தமிழ் நாடு தகவல் ஆணையம் தனது முடிவினையும் மற்றும் மேல்முறையீட்டுக்கான உரிமைகளையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும். மேற்கூறிய முடிவுகளால் பாதிக்கப்பட்டோர் பரிகாரம் வேண்டி நீதிப் பேராணை வழக்கு இந்திய அரசு அமைப்பு சட்டத்தின்கீழ் தொடரலாம்.